
பி.எம். சூர்ய கர் திட்டத்தின் கீழ் 2 ஆண்டுகளில் 50 லட்சத்திற்கும் அதிகமான வீடுகளில் சோலார் பேனல்கள் பொருத்தப்பட்டுள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.
ரூ.75,021 கோடி ஒதுக்கீட்டில் செயல்படுத்தப்படும் இத்திட்டத்தின் மூலம் பயனாளிகளுக்கு ரூ.28,024 கோடி மானியமாக வழங்கப்பட்டுள்ளது.
2025-ம் நிதியாண்டில் உபரி மின்சாரத்தை விற்றதன் மூலம் 12 லட்சத்திற்கும் அதிகமான குடும்பங்கள் ரூ.421 கோடி வருமானம் ஈட்டியுள்ளன.