தமிழகத்தில் ஜூலை 31 வரை கோவை, நீலகிரி மற்றும் தேனி மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.
மேலும் 7 மாவட்டங்களில் இன்று மதியம் 1 மணி வரை மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆகஸ்ட் 2-ம் தேதி வரை மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் மிதமான மழை தொடரும் என வானிலை மையம் கணித்துள்ளது.