
ஜிவி பிரகாஷ் நடிப்பில் உருவாகியுள்ள ‘இம்மார்டல்’ திரைப்படத்தின் அதிகாரப்பூர்வ டிரெய்லர் நாளை வெளியிடப்படும் என படக்குழு அறிவித்துள்ளது.
மாரியப்பன் சின்னா இயக்கத்தில் உருவாகியுள்ள இப்படம் செப்டம்பர் 4-ம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது.
காதல் மற்றும் ஹாரர் கதைக்களத்தைக் கொண்ட இப்படத்தில் கயாடு லோஹர் கதாநாயகியாக நடித்துள்ளார் மற்றும் சாம் சிஎஸ் இசையமைத்துள்ளார்.