/nakkheeran/media/media_files/2026/11/06/dvacsand-2026-11-06-10-53-45.jpg)
ரூ.4,730 கோடி மதிப்பிலான மணல் குவாரி முறைகேடு வழக்கில், அமலாக்கத்துறை விசாரணையின் அடிப்படையில் லஞ்ச ஒழிப்புத்துறை வழக்குப்பதிவு செய்துள்ளது.
தமிழகம் முழுவதும் திண்டுக்கல் ரத்தினம் மற்றும் புதுக்கோட்டை மணல் குவாரி அதிபர்கள், நீர்வளத்துறை அதிகாரிகள் வீடுகள் உட்பட 30க்கும் மேற்பட்ட இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர்.
நீர்வளத்துறைக்கு கீழ் இயங்கிய 28 மணல் குவாரிகள் அனுமதிக்கப்பட்ட அளவை விட 10 முதல் 30 மடங்கு வரை கூடுதலாக ஆற்று மணல் அள்ளியதாகப் புகார் எழுந்துள்ளது.