இலங்கை நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச, இலஞ்சம் அல்லது ஊழல் குற்றச்சாட்டுகள் குறித்த விசாரணைக்காக நாளை வெள்ளிக்கிழமை காலை 9 மணிக்கு ஆணைக்குழுவில் ஆஜராகுமாறு அழைப்பாணை அனுப்பப்பட்டுள்ளது.
கடந்த திங்கட்கிழமையே அவர் ஆஜராகுமாறு அழைக்கப்பட்டிருந்த நிலையில், தற்போது வெள்ளிக்கிழமை ஆஜராகுமாறு உத்தியோகப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளதாக அவரது சட்டத்தரணி முதித்த ஆர்.லொக்குமுதலி தெரிவித்துள்ளார்.
இருப்பினும், இந்த விசாரணைக்கான குறிப்பிட்ட காரணம் குறித்து ஆணைக்குழு இதுவரை எந்தத் தகவலையும் வெளியிடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.