
பாகிஸ்தானின் பலூசிஸ்தான் மாகாணம் நோஷ்கி பஜாரில் ராகேஷ்குமார் என்ற இந்து வியாபாரி மர்ம நபர்களால் சுட்டுக்கொலை செய்யப்பட்டார்.
கடைக்குள் புகுந்த மர்ம நபர்கள் ராகேஷ்குமாரிடம் 'ஓசி'க்கு பொருள் கேட்டு தொந்தரவு செய்துள்ளனர், அதற்கு அவர் எதிர்ப்பு தெரிவித்ததால் இந்த கொடூர சம்பவம் நடந்துள்ளது.
துப்பாக்கியால் சுடப்பட்ட ராகேஷ்குமார் சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் சரிந்து உயிரிழந்தார், தாக்குதல் நடத்தியவர்கள் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டனர்.