
நத்தத்தில் நடைபெற்ற 10-வது டிஎன்பிஎல் டி20 கிரிக்கெட் தொடரின் 10-வது லீக் ஆட்டத்தில், நெல்லை ராயல் கிங்ஸ் அணியை 8 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி திருப்பூர் தமிழன்ஸ் அபார வெற்றி பெற்றது.
முதலில் பேட்டிங் செய்த நெல்லை ராயல் கிங்ஸ் அணி, முகிலேஷின் 46 ரன்கள் மற்றும் சந்தோஷ் குமாரின் 43 ரன்கள் உதவியுடன் 20 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட் இழப்பிற்கு 206 ரன்கள் குவித்தது.
கடினமான இலக்கை துரத்திய திருப்பூர் தமிழன்ஸ் அணி, துஷார் ரஹேஜாவின் 90 ரன்கள் (52 பந்துகள்) மற்றும் அமித் சத்விக்கின் 76 ரன்கள் (31 பந்துகள்) உதவியுடன் 18.1 ஓவர்களில் 207 ரன்கள் எடுத்து வென்றது.