
ஹோர்முஸ் நீரிணையில் ஈரான் இரண்டு எண்ணெய் டேங்கர் கப்பல்களைத் தாக்கியதைத் தொடர்ந்து, அமெரிக்கா ஈரானின் முக்கியக் கட்டமைப்புகள் மீது ஏவுகணைத் தாக்குதல்களை நடத்தியது.
இதற்குப் பதிலடியாக ஈரான் புரட்சிகர பாதுகாப்புப் படை ஜோர்டான் மற்றும் பஹ்ரைனில் உள்ள அமெரிக்க ராணுவ நிலைகள் மீது 13 ஏவுகணைகளை வீசியதில் 10 ஏவுகணைகள் இடைமறித்து அழிக்கப்பட்டன.
ஈரான் தனது தாக்குதலைத் தொடர்ந்தால் மிகத் தீவிரமான பதிலடி கொடுக்கப்படும் என்று அமெரிக்க அதிபர் டிரம்ப் எச்சரித்துள்ள நிலையில், குவைத் தனது தயார்நிலையை அறிவித்துள்ளது.