
எகிப்தில் போதைப்பொருள் தயாரித்து விற்பனை செய்த வழக்கில், பிரபல டிவி தொகுப்பாளினி சாரா கலீபா உட்பட 12 பேருக்கு சிறப்பு நீதிமன்றம் மரண தண்டனை விதித்துள்ளது.
39 வயதான சாரா கலீபாவுக்குச் சொந்தமான இடங்களில் இருந்து 750 கிலோவுக்கும் அதிகமான போதைப்பொருட்களை அதிகாரிகள் பறிமுதல் செய்துள்ளனர்.
பாதுகாப்பு மற்றும் குற்றங்கள் தொடர்பான நிகழ்ச்சியை நடத்தி வந்த சாரா, தீர்ப்பின் போது தான் புகைப்பிடித்ததே இல்லை என நீதிபதியிடம் முறையிட்டார்.