
இசைஞானி இளையராஜாவின் அண்ணன் மகன் ஜெயன் கதாநாயகனாக அறிமுகமாகும் 'ராஜாஸ் பிளேலிஸ்ட்' திரைப்படத்தின் படப்பிடிப்பு பணிகள் நிறைவடைந்துள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது.
வெங்கட் பிரபு கதை எழுதியுள்ள இப்படத்திற்கு யுவன் ஷங்கர் ராஜா இசையமைக்க, சுஜித் என் சுப்ரமணியம் திரைக்கதை எழுதி இயக்கியுள்ளார்.
எலிபேண்டைன் நிறுவனம் தயாரிக்கும் இப்படத்தில் சோனா ஒலிக்கல் கதாநாயகியாக நடிப்பதோடு, வாகை சந்திரசேகர் மற்றும் குரு சோமசுந்தரம் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.