
உலகளாவிய டி20 பிரான்சைஸ் கிரிக்கெட் தொடரான சாம்பியன்ஸ் லீக் டி20 போட்டியை மீண்டும் கொண்டு வரும் திட்டத்தை ஐசிசி கைவிட்டுள்ளதாக அறிவித்துள்ளது.
கிரிக்கெட்டின் முன்னணி மூன்று நாடுகளான இந்தியா, ஆஸ்திரேலியா மற்றும் இங்கிலாந்து வாரியங்களின் தீவிர எதிர்ப்பு காரணமாக இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த முட்டுக்கட்டை காரணமாக, 2027-2031 ஆண்டுகளுக்கான எதிர்கால சுற்றுப்பயணத் திட்டம் தற்போதைய நிலையை ஒட்டியே தொடரும் என எதிர்பார்க்கப்படுகிறது.