
தமிழகத்தில் டெங்கு மற்றும் ப்ளூ காய்ச்சல் பாதிப்புகள் குறையாத நிலையில் பொது இடங்களில் முகக்கவசம் அணிவது நல்லது என பொது சுகாதாரத் துறை அறிவுறுத்தியுள்ளது.
இந்த ஆண்டில் இதுவரை டெங்கு காய்ச்சலால் 21 ஆயிரத்துக்கும் மேற்பட்டோரும், உண்ணி காய்ச்சலால் 5,000க்கும் மேற்பட்டோரும் பாதிக்கப்பட்டுள்ளனர்.
காய்ச்சல் பாதிப்பு இருந்தால் சுய மருத்துவமோ அலட்சியமோ காட்டாமல் மருத்துவரிடம் சிகிச்சை பெறுமாறு பொதுமக்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.