
இலங்கை எதிர்பார்ப்பதை விடவும் மிக விரைவாக செயற்கை நுண்ணறிவு சார்ந்த எதிர்காலத்தை நோக்கி நகர்ந்து கொண்டிருப்பதாக பன்னாட்டு நாணய நிதியம் தெரிவித்துள்ளது.
சில்லறை வர்த்தகப் பரிமாற்றங்களில் 70% இற்கும் அதிகமானவை மின்னணு நிதிப் பரிமாற்றம் மூலமும், அரசின் வருவாயில் 60% இற்கும் அதிகமானவை டிஜிட்டல் முறையிலும் திரட்டப்படுகின்றன.
நாட்டின் டிஜிட்டல் எழுத்தறிவு வீதம் 72% ஆக உள்ளதாகவும், புதிய நவீன AI தொழில்நுட்பங்களை விரைவாகச் சுவீகரிக்க வாய்ப்புள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.