
பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கானுக்கு உரிய மருத்துவ சிகிச்சை வழங்கக் கோரி, சுனில் கவாஸ்கர், கபில்தேவ் உள்ளிட்ட 21 சர்வதேச கிரிக்கெட் முன்னாள் கேப்டன்கள் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப்பிற்கு கடிதம் எழுதியுள்ளனர்.
நீண்டகாலத் தனிமைச் சிறைவாசத்தால் இம்ரான் கானின் உடல்நிலை, குறிப்பாக வலது கண் பார்வைக் குறைபாடு பாதிக்கப்பட்டுள்ளதாகக் கூறி, அவரது தனிப்பட்ட மருத்துவர்கள் பரிசோதிக்க அனுமதிக்கக் கோரியுள்ளனர்.
பாகிஸ்தான் உச்ச நீதிமன்ற உத்தரவுப்படி, வாராந்திரக் குடும்பச் சந்திப்புகளை நிர்வாகத் தாமதமின்றி அனுமதிக்க வேண்டும் என்றும் மனிதாபிமான அடிப்படையில் இந்த கோரிக்கையை வைப்பதாகவும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.