
இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் விராட் கோலி, 2027-ஆம் ஆண்டு நடைபெறவுள்ள ஒருநாள் உலகக்கோப்பைத் தொடருக்குப் பிறகு சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து முழுமையாக ஓய்வு பெறவுள்ளதாக அறிவித்துள்ளார்.
ஜிம்பாப்வே, தென்னாப்பிரிக்கா மற்றும் நமீபியா ஆகிய நாடுகளில் நடைபெறவுள்ள 2027 உலகக்கோப்பைத் தொடர்தான் அணிக்காக தான் விளையாடப்போகும் கடைசி உலகக்கோப்பைத் தொடர் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
2008-ல் ஒருநாள் கிரிக்கெட்டில் அறிமுகமான அவர், 2011 உலகக்கோப்பையை வென்ற இந்திய அணியில் இடம்பெற்றிருந்ததுடன், 2023 உலகக்கோப்பையில் 765 ரன்கள் குவித்து தொடர் நாயகன் விருதை வென்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.