
அமெரிக்காவின் செயின்ட் லூயிஸ் நகரில் நடைபெறும் கிராண்ட் செஸ் தொடரின் அரைஇறுதியில், இந்திய வீரர் பிரக்ஞானந்தா ஜெர்மனியின் வின்சென்ட் கீமரை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறினார்.
கிளாசிக்கல், ரேபிட் மற்றும் பிளிட்ஸ் ஆட்டங்கள் அடங்கிய தொடர் முடிவில், பிரக்ஞானந்தா 19-9 என்ற புள்ளி கணக்கில் அபார வெற்றி பெற்றார்.
அரைஇறுதி ஆட்டத்தின் ஒரு பகுதியாக நடந்த 4 பிளிட்ஸ் ஆட்டங்களில், பிரக்ஞானந்தா முதல் ஆட்டத்தில் வெற்றி பெற்று தனது இறுதிப்போட்டி வாய்ப்பை உறுதி செய்தார்.