எகிப்தின் டாமியெட்டா துறைமுகத்தில் நிறுத்தப்பட்டிருந்த அமெரிக்க நிறுவனத்திற்குச் சொந்தமான எரிவாயு கப்பல் மற்றும் கிரீஸ் நாட்டு கப்பல் மீது ட்ரோன் தாக்குதல் நடத்தப்பட்டது.
சர்வதேச கடல்சார் புலனாய்வு நிறுவனமான 'ஆம்ப்ரே' இந்த தாக்குதலை உறுதிப்படுத்தியுள்ள நிலையில், எகிப்து பெட்ரோலிய அமைச்சகம் யாருக்கும் காயங்கள் ஏற்படவில்லை எனத் தெரிவித்துள்ளது.
இப்பகுதியில் நிலவும் பதற்றமான சூழலைக் கருத்தில் கொண்டு, இந்த தாக்குதலின் பின்னணியில் ஈரான் இருக்கலாம் என்ற சந்தேகத்தில் பாதுகாப்புப் படையினர் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.