
விருதுநகர் மாவட்டம் அனுப்பன்குளம் மற்றும் விழுப்பனூர் கிராமங்களில் உள்ள பட்டாசு ஆலைகளில் நேற்று ஏற்பட்ட வெடி விபத்தில் ஈஸ்வரன் (56), சக்திவேல் (55) ஆகிய இருவர் உயிரிழந்தனர்.
விபத்தில் பலத்த காயமடைந்த கானிராஜ் என்பவருக்கு ரூ. 1 லட்சமும், லேசான காயமடைந்த கருப்பாயி, மகாலட்சுமி, பவானி, இருளாயி ஆகியோருக்கு தலா ரூ. 50 ஆயிரமும் நிவாரணமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தலா ரூ. 4 லட்சம் நிதியுதவி வழங்கப்படும் என முதலமைச்சர் ச. ஜோசப் விஜய் அறிவித்து, காயமடைந்தவர்களுக்குச் சிறப்பு சிகிச்சை அளிக்க உத்தரவிட்டுள்ளார்.