
கனடாவைச் சேர்ந்த 61 வயது ஓய்வு பெற்ற பள்ளி ஆசிரியையான டோனாஜீன் வைல்ட், அமெரிக்காவில் நடைபெற்ற உலக சீனியர் விளையாட்டுப் போட்டிகளில் பங்கேற்றார்.
அவர் தொடர்ந்து 5 மணி நேரம் அசையாமல் பிளாங்க் நிலையில் இருந்து புதிய கின்னஸ் உலக சாதனையைப் படைத்துள்ளார்.
கடந்த 2024-ஆம் ஆண்டு மார்ச் மாதம் அவர் படைத்த 4 மணி நேரம் 30 நிமிட சாதனையை அவரே முறியடித்துள்ள நிலையில், தனது 12 பேரக்குழந்தைகள் நேரில் வந்து உற்சாகப்படுத்தியதே இந்த வெற்றிக்குக் காரணம் என்று அவர் தெரிவித்துள்ளார்.