
ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் தொழிலதிபர் அகில்குமாரை மிரட்டி பணம் பறித்ததாக எழுந்த புகாரில், இன்ஸ்பெக்டர் முகமது புகாரி மற்றும் ஊர்காவல்படை சீனிவாசன் கைது செய்யப்பட்டுள்ளனர்.
தொழிலதிபரிடம் போதைப்பொருள் வழக்கில் சிக்க வைப்பதாக மிரட்டி ரூ.5 லட்சம் வாங்கியது விசாரணையில் உறுதியானதை அடுத்து, யானைக்கவுனி போலீஸார் இருவரையும் கைது செய்தனர்.
ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கை சி.பி.ஐ விசாரிக்க உள்ள நிலையில், அந்த வழக்கை விசாரித்த தனிப்படை இன்ஸ்பெக்டர் முகமது புகாரி சர்ச்சையில் சிக்கி சிறையில் அடைக்கப்பட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.