
UPI பரிவர்த்தனைகளுக்கு உடனடியாக எந்தக் கட்டணமும் விதிக்கப்படவில்லை என்றும், சமூக வலைத்தளங்களில் பரவும் தகவல்கள் வதந்தி என்றும் மத்திய அரசு விளக்கம் அளித்துள்ளது.
Payment and Settlement Systems சட்டத்தில் செய்யப்பட்டுள்ள திருத்தம், எதிர்காலத்தில் குறிப்பிட்ட டிஜிட்டல் கட்டண முறைகளுக்கு கட்டணம் நிர்ணயிக்க அரசுக்கு அதிகாரம் வழங்க மட்டுமே கொண்டுவரப்பட்டுள்ளது.
தனிநபர்களுக்கிடையேயான பரிவர்த்தனைகள் மற்றும் சிறு வணிகர்களுக்கான சேவைகள் எப்போதும் போலக் கட்டணமின்றித் தொடரும் என அரசு உறுதி அளித்துள்ளது.