
இந்தியாவுக்கு எதிரான ஒருநாள் மற்றும் டி20 கிரிக்கெட் தொடர்களில் விளையாடுவதற்காக வெஸ்ட் இண்டீஸ் அணியின் முதல் கட்ட வீரர்கள் திருவனந்தபுரம் விமான நிலையத்தை வந்தடைந்தனர்.
கேரள கிரிக்கெட் சங்கம் சார்பில் அவர்களுக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்ட நிலையில், முதல் ஒருநாள் போட்டி செப்டம்பர் 27ஆம் தேதி ஸ்போர்ட்ஸ் ஹப் சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் தொடங்குகிறது.
இந்தத் தொடரைத் தொடர்ந்து இரு அணிகளும் அக்டோபர் 6ஆம் தேதி முதல் லக்னோவில் தொடங்கும் 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் மோதவுள்ளன.