
நச்சுத்தன்மை கொண்ட ஊமத்தை பழங்கள் மற்றும் விதைகளை உணவுப் பொருளாக விற்பனை செய்ததற்காக அமேசான், ஸ்விகி இன்ஸ்டாமார்ட் மற்றும் பிக்பாஸ்கெட் நிறுவனங்களின் உணவு உரிமங்களை கர்நாடக அரசு ரத்து செய்துள்ளது.
மத்திய உணவுப் பாதுகாப்பு விதிகளின்படி மனித நுகர்வுக்குத் தகுதியற்ற ஊமத்தையை, உரிம எண்களைப் பயன்படுத்தி ஆன்லைனில் விற்பனை செய்தது ஆய்வில் கண்டறியப்பட்டது.
பிக்பாஸ்கெட் நிறுவனம் விற்பனையை நிறுத்தியுள்ளதாகத் தெரிவித்துள்ள நிலையில், மற்ற நிறுவனங்கள் மீதான விசாரணை மற்றும் கண்காணிப்பு தொடர்ந்து நடைபெறும் என உணவுப் பாதுகாப்புத் துறை எச்சரித்துள்ளது.