
மின்வாரிய ஹார்டு டிஸ்க் திருட்டு தொடர்பான விவகாரத்தில், டாஸ்மாக் முறைகேடு வழக்கில் ஆலந்தூரில் உள்ள லஞ்ச ஒழிப்புத் துறையில் செந்தில் பாலாஜி ஆஜராகி விளக்கம் அளித்தார்.
சட்டமன்றத்தில் 18 ஹார்டு டிஸ்க்குகள் காணாமல் போனதாகப் புகார் அளிக்கப்பட்ட நிலையில், 38 ஹார்டு டிஸ்க்குகள் பறிமுதல் செய்யப்பட்டது குறித்து அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.
தன்னை 'கரூர் கம்பெனி' என அமைச்சர் நிர்மல்குமார் தனிப்பட்ட முறையில் விமர்சித்ததாகக் குற்றம் சாட்டிய செந்தில் பாலாஜி, எதிர்க்கட்சிகளின் கேள்விகளுக்கு அமைச்சர்கள் பதில் அளிக்கத் தவறுவதாகக் குறிப்பிட்டார்.