
இந்தியா மற்றும் ஆப்கானிஸ்தான் அணிகளுக்கு இடையிலான 3 போட்டிகள் கொண்ட டி20 தொடர் செப்டம்பர் 13 முதல் 17 வரை டெல்லியில் நடைபெற உள்ளது.
இந்தத் தொடரின் போட்டிகள் செப்டம்பர் 13, 15 மற்றும் 17 ஆகிய தேதிகளில் அருண் ஜேட்லி மைதானத்தில் நடைபெறும் என பிசிசிஐ மற்றும் ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் வாரியம் அறிவித்துள்ளன.
வங்கதேசத்தில் நிலவிய அரசியல் சூழல் காரணமாக அந்த நாட்டுடனான தொடர் தவிர்க்கப்பட்ட நிலையில், ஆப்கானிஸ்தான் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாடுகிறது.