
விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள அனைத்து நியாயவிலைக் கடைகளிலும் ஆகஸ்ட் 2-ம் தேதி காலை 9 மணி முதல் மாலை 6 மணி வரை இ-கேஒய்சி சிறப்பு முகாம் நடைபெறுகிறது.
முன்னுரிமை மற்றும் அந்தியோதயா அன்ன யோஜனா குடும்ப அட்டைதாரர்கள் உட்பட அனைத்து உறுப்பினர்களும் ஆதார் விவரங்களை உறுதிப்படுத்த கைவிரல் ரேகை பதிவு செய்வது கட்டாயமாகும்.
வெளியூரில் வசிப்பவர்கள் தங்களுக்கு அருகில் உள்ள எந்த நியாயவிலைக் கடையிலும் சென்று இந்த இ-கேஒய்சி பதிவை மேற்கொள்ளலாம் என மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.