
வயது மற்றும் ஆவணங்களில் முரண்பாடு இருந்ததால் பெங்கால் கிரிக்கெட் சங்கத்தைச் சேர்ந்த 65 வீரர்களுக்கு அடுத்த இரண்டு உள்நாட்டு சீசன்களுக்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது.
அருண் குமார் சௌராசியா என்ற வீரரின் ஆவணங்களில் 115 மாதங்கள் வயது வித்தியாசம் இருப்பது கண்டறியப்பட்ட நிலையில், அவர் 19 வயதுக்குட்பட்டோருக்கான வினூ மன்கட் கோப்பையில் விளையாடியது அம்பலமாகியுள்ளது.
இந்தியாவின் முன்னாள் 19 வயதுக்குட்பட்டோர் உலகக் கோப்பை வீரர் ரவி குமார் மற்றும் சுழற்பந்து வீச்சாளர் ரோஹித் யாதவ் ஆகியோரும் முறைகேடு பட்டியலில் இடம் பெற்றுள்ளனர்.