
கொழும்பில் நடந்த இரண்டாவது டெஸ்ட் போட்டி டிரா ஆனதால், இரண்டு போட்டிகள் கொண்ட தொடரை இந்திய அணி 1-0 என்ற கணக்கில் கைப்பற்றியது.
இலங்கை வீரர் சோனல் தினுஷா இரண்டாவது இன்னிங்சில் 264 பந்துகளை எதிர்கொண்டு 133 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்ததால், இந்திய அணியின் வெற்றி வாய்ப்பு பறிபோனது.
உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தரவரிசையில் 51.52 சதவீத புள்ளிகளுடன் இந்திய அணி தற்போது 5-வது இடத்தில் நீடிக்கிறது.