
ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனம் நடப்பு நிதியாண்டின் இரண்டாம் காலாண்டில் மொத்த வருவாய் 27.8% அதிகரித்து ரூ.3,62,268 கோடியாகவும், நிகர லாபம் 33.8% உயர்ந்து ரூ.29,550 கோடியாகவும் பதிவாகியுள்ளது.
பங்குச் சந்தையில் பட்டியலிடப்பட்ட பிறகு தனது முதல் காலாண்டு முடிவுகளை வெளியிட்டுள்ள ஜியோ பிளாட்ஃபார்ம்ஸ் நிறுவனத்தின் செயல்பாட்டு வருவாய் 11.4% அதிகரித்து ரூ.40,475 கோடியாக உள்ளது.
ஜியோவின் வாடிக்கையாளர் எண்ணிக்கை 54.24 கோடியாக உயர்ந்துள்ள நிலையில், இந்தக் காலாண்டில் மட்டும் புதிதாக 91 லட்சம் வாடிக்கையாளர்கள் இணைந்துள்ளனர்.