
செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தின் எதிர்கால வளர்ச்சி குறித்த சந்தேகங்கள் மற்றும் பார்க்லேஸ் வங்கியின் பங்குப் பரிந்துரைத் தரம் குறைக்கப்பட்டதன் காரணமாக டெல் நிறுவன பங்குகள் ஒரே நாளில் சரிவை சந்தித்தன.
அமெரிக்க பங்குச் சந்தையில் டெல் நிறுவனப் பங்குகள் ஒரே நாளில் சுமார் 11.6% வரை சரிந்ததால், இந்திய மதிப்பில் சுமார் 1.90 லட்சம் கோடி ரூபாய் அளவுக்கு இழப்பு ஏற்பட்டுள்ளது.
இந்த பங்குச் சரிவு காரணமாக உலக பணக்காரர்கள் பட்டியலில் டெல் நிறுவன நிறுவனர் மைக்கேல் டெல் 4வது இடத்திலிருந்து 5வது இடத்திற்குச் சரிந்துள்ளார்.