நடிகர் விஜய் தேவரகொண்டா தனது பெயர், படம் உள்ளிட்ட ஆளுமை அடையாளங்களை அனுமதியின்றி வணிக நோக்கங்களுக்குப் பயன்படுத்துவதைத் தடுக்கக் கோரி டெல்லி உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார்.
செயற்கை நுண்ணறிவு மூலம் மாற்றியமைக்கப்பட்ட படங்கள், போலியான விளம்பரங்கள் மற்றும் டீ-சட்டை, குவளைகளில் அவரது அடையாளம் தவறாகப் பயன்படுத்தப்படுவதாக மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த வழக்குகள் விசாரணைக்கு வந்த நிலையில், மனுக்கள் தொடர்பாகச் சம்பந்தப்பட்ட தரப்பினருக்கு டெல்லி உயர் நீதிமன்றம் அழைப்பாணை அனுப்ப உத்தரவிட்டுள்ளது.