
இந்தியாவில் மரபணு மாற்றப்பட்ட பொருட்களை இறக்குமதி செய்ய இதுவரை அனுமதி வழங்கப்படவில்லை என்றும் எதிர்காலத்திலும் அனுமதி வழங்கப்படாது எனவும் மத்திய அமைச்சர் பியூஸ் கோயல் உறுதியளித்தார்.
டெல்லியில் கல்லூரி மாணவர்களிடையே பேசிய அவர், இது மிகவும் உணர்வுப்பூர்வமான விஷயம் என்பதால் கடுமையான சான்றிதழ் நடைமுறைகள் பின்பற்றப்படுவதாகத் தெரிவித்தார்.
மேலும், எத்தகைய தடையற்ற வர்த்தக ஒப்பந்தங்களிலும் பால் பண்ணை துறைக்கு இந்தியா இதுவரை வரிச் சலுகைகளை வழங்கவில்லை என்றும் அவர் குறிப்பிட்டார்.