/polimer-news/media/media_files/2026/10/13/chennaihc-2026-10-13-10-54-01.jpg)
அதிமுக எம்எல்ஏக்கள் 6 பேர் ராஜினாமாவை சபாநாயகர் ஏற்றது செல்லும் என்று சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளதுடன், கொறடா அக்ரி கிருஷ்ணமூர்த்தியின் வழக்கை தள்ளுபடி செய்துள்ளது.
எம்எல்ஏக்களுக்கு எதிரான தகுதி நீக்க நடவடிக்கை நிலுவையில் உள்ளதால் சபாநாயகர் ராஜினாமாவை ஏற்றிருக்கக் கூடாது என்ற வாதத்தை ஏற்க மறுத்த நீதிமன்றம், தகுதி நீக்க நடவடிக்கை மீது சபாநாயகர் 2 மாதங்களில் முடிவெடுக்க வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளது.
இந்த வழக்கின் இறுதி உத்தரவாக, சபாநாயகர் சனிக்கிழமைக்குள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கையை தவிர்த்து, 60 நாட்களுக்குள் உரிய முடிவை எடுக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.