
இந்தியா மற்றும் ஆப்கானிஸ்தான் அணிகள் மோதும் 3 போட்டிகள் கொண்ட டி20 தொடர் செப்டம்பர் 13, 15 மற்றும் 17 ஆகிய தேதிகளில் டெல்லியில் நடைபெற உள்ளது.
பாதுகாப்பு காரணங்களுக்காக ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் வாரியம் இந்தத் தொடரை இந்தியாவில் நடத்த முடிவு செய்துள்ளதாக பி.சி.சி.ஐ தலைவர் மிதுன் மன்ஹாஸ் தெரிவித்துள்ளார்.
இரு அணிகளும் கடைசியாக 2024 ஜனவரியில் டி20 தொடரில் விளையாடிய நிலையில், இந்தத் தொடர் இரு நாட்டு வீரர்களுக்கும் சிறந்த அனுபவத்தை வழங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.