
துாரந்த் கோப்பை கால்பந்து தொடரின் காலிறுதிக்கு, லீக் சுற்றில் விளையாடிய 3 போட்டிகளிலும் வெற்றி பெற்று 9 புள்ளிகளுடன் வடகிழக்கு யுனைடெட் அணி முன்னேறியது.
கவுகாத்தியில் நடந்த எப் பிரிவு லீக் போட்டியில், வடகிழக்கு யுனைடெட் அணி 3-1 என்ற கோல் கணக்கில் ஸ்ரீநகர் அணியைத் தோற்கடித்தது.
போட்டியின் 9 மற்றும் 55-வது நிமிடங்களில் பார்த்திப் சுந்தர் இரண்டு கோல்களையும், 68-வது நிமிடத்தில் அஜாரெய் ஒரு கோலையும் அடித்து அணியின் வெற்றியை உறுதி செய்தனர்.