
ஐக்கிய அரபு எமிரேட்ஸ் வான் பாதுகாப்பு அமைப்பு ஈரான் ஏவிய ஏவுகணை தாக்குதல் அச்சுறுத்தலைக் கண்டறிந்ததை அடுத்து, துபாய் மக்கள் பாதுகாப்பான இடங்களில் இருக்க தேசிய அவசரநிலை ஆணையம் அறிவுறுத்தியது.
ஈரான் ஏவிய இரண்டு ஏவுகணைகளை ஐக்கிய அரபு எமிரேட்ஸ் ராணுவம் கடலில் சுட்டு வீழ்த்தியதாக உறுதிப்படுத்தப்பட்ட நிலையில், துபாயில் சைரன் ஒலிகள் மற்றும் பலத்த வெடிச்சத்தங்கள் கேட்டன.
ஜூன் மாதம் ஈரான் மற்றும் அமெரிக்கா இடையே மேற்கொள்ளப்பட்ட இடைக்கால அமைதி ஒப்பந்தம் நேற்று முன்தினம் காலாவதியான நிலையில் இந்த ஏவுகணை தாக்குதல் சம்பவம் நிகழ்ந்துள்ளது.