
நேபாளத்தின் முதல் பெண் ஹெலிகாப்டர் கேப்டனான 40 வயது பிரியா அதிகாரி, நேபாள-திபெத் எல்லைப் பகுதிகளில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களை மீட்கும் பணியில் தீவிரமாக ஈடுபட்டுள்ளார்.
ரசுவா மாவட்டத்தின் திமுரே கிராமத்தில் மட்டும் கடந்த இரண்டு நாட்களில் 200-க்கும் மேற்பட்டோர் ஹெலிகாப்டர்கள் மூலம் மீட்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.
2015-ம் ஆண்டு நிலநடுக்கத்தை விட இந்த வெள்ளம் மிகப்பெரிய அழிவை ஏற்படுத்தியுள்ளதாகவும், ஐந்து நீர்மின் நிலையங்கள் முற்றிலும் சேதமடைந்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.