
சாட்ஜிபிடி போன்ற ஏஐ சேவைகளில் 80-களின் ட்ரெண்ட் புகைப்படங்களை உருவாக்குவது தரவு மையங்களில் அதிக மின்சாரம் மற்றும் தண்ணீர் நுகர்வை ஏற்படுத்துகிறது.
கலிபோர்னியா பல்கலைக்கழக ஆய்வின்படி, சாட்ஜிபிடியுடன் 20 முதல் 50 கேள்வி பதில்கள் கொண்ட உரையாடலுக்கு சுமார் 500 மி.லி. தண்ணீர் தேவைப்படுகிறது.
ஐக்கிய நாடுகளின் பல்கலைக்கழக அறிக்கையின்படி, 2030-க்குள் ஏஐ தரவு மையங்களின் தண்ணீர் தேவை 130 கோடி இந்தியர்கள் பயன்படுத்தும் அளவிற்கு அதிகரிக்கக்கூடும்.