
பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கானை 48 மணி நேரத்திற்குள் ராவல்பிண்டி சிறையிலிருந்து இஸ்லாமாபாத்தில் உள்ள ஷிஃபா சர்வதேச மருத்துவமனைக்கு மாற்ற உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
ஊழல் வழக்குகளில் குற்றவாளி என அறிவிக்கப்பட்டு 2023 ஆகஸ்ட் முதல் சிறையில் உள்ள இம்ரான் கான், செப்டம்பர் 16 வரை மருத்துவமனையில் சிகிச்சை பெறுவார்.
இம்ரான் கானின் உடல்நிலையை ஆய்வு செய்ய அவரது சகோதரி டாக்டர் அலீமா கான் மற்றும் தனிப்பட்ட மருத்துவர் அடங்கிய மருத்துவக் குழு அமைக்கப்படும் என நீதிமன்றம் தெரிவித்துள்ளது.