
இந்திய ஜவுளி சந்தையின் தற்போதைய மதிப்பீடான 17.20 லட்சம் கோடி ரூபாயை, 2030-ம் ஆண்டுக்குள் 33.50 லட்சம் கோடி ரூபாயாக உயர்த்த மத்திய அரசு இலக்கு நிர்ணயித்துள்ளது.
பருத்தி உற்பத்தியை ஊக்குவிக்க கபாஸ் கிராந்தி திட்டத்தின் கீழ் 5,659 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக மத்திய ஜவுளி துறை கமிஷனர் சவுரப் குல்கர்னி தெரிவித்தார்.
சர்வதேச அளவில் பருத்தி உற்பத்தியில் இந்தியா 19 சதவீத பங்களிப்பை வழங்குகிறது, மேலும் சுமார் 60 லட்சம் விவசாயிகள் இந்த துறையைச் சார்ந்துள்ளனர்.