
லூதியானாவில் நடைபெற்ற 21-வது தேசிய யூத் தடகள சாம்பியன்ஷிப் போட்டியில், தமிழக வீரர் நீல் சாம்ராஜ் 100 மீட்டர் ஓட்டத்தில் தங்கப் பதக்கம் வென்றுள்ளார்.
அரையிறுதியில் 10.53 வினாடிகளில் இலக்கை எட்டிய அவர், இறுதிப்போட்டியில் 10.46 வினாடிகளில் கடந்து ஒரே நாளில் இருமுறை தேசிய சாதனையை முறியடித்துள்ளார்.
இந்த வெற்றியின் மூலம் 100 மீட்டர் பிரிவில் இந்தியாவின் அதிவேக யூத் ஓட்டப்பந்தய வீரர் என்ற பெருமையை நீல் சாம்ராஜ் பெற்றுள்ளார்.