
பெண்களின் திருமண நாளில் தமிழக அரசின் சார்பில் எட்டு கிராம் தங்க நாணயம் மற்றும் ஒரு பட்டுப்புடவை 'அண்ணன் சீர்' ஆக வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த திட்டத்தை செயல்படுத்த 812 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இதற்கான அரசாணையும் வெளியிடப்பட்டுள்ளது.
தங்கம் நாணயம் மற்றும் பட்டுப் புடவையைக் கொள்முதல் செய்ய தமிழக அரசு இன்று டெண்டர் வெளியிட்டுள்ளது.