
கடந்த ஜூலை மாதம் இந்தியாவில் அதிகம் விற்பனையான டாப் 15 கார்களில் 9 இடங்களை மாருதி சுஸுகி நிறுவனம் பிடித்துள்ளது.
மாருதி டிசையர் 23,791 யூனிட்டுகள் விற்பனையுடன் முதலிடத்திலும், வேகன் ஆர் 23,298 யூனிட்டுகளுடன் இரண்டாம் இடத்திலும் உள்ளன.
டாடா பன்ச் விற்பனை கடந்த ஆண்டு ஜூலையுடன் ஒப்பிடுகையில் 98 சதவீதம் அதிகரித்து 21,313 யூனிட்டுகளாக உயர்ந்துள்ளது.