
தலைமை தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமாரின் பதவி விலகலை வலியுறுத்தி தில்லியில் உள்ள ஆகாசவாணி வளாகத்தில் இண்டியா கூட்டணி தலைவர்கள் மற்றும் எம்.பி-க்கள் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.
சந்திப்புக்கு அனுமதி மறுக்கப்பட்ட நிலையில், போராட்டத்தில் ஈடுபட்ட மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி, காங்கிரஸ் எம்.பி பிரியங்கா காந்தி உள்ளிட்ட தலைவர்களை காவல்துறையினர் வலுக்கட்டாயமாக கைது செய்தனர்.
நாடாளுமன்ற வளாகத்தில் இருந்து தேர்தல் ஆணைய அலுவலகத்தை நோக்கி காங்கிரஸ் மற்றும் சமாஜ்வாதி கட்சிகளைச் சேர்ந்த 300-க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்ட பேரணியைத் தொடர்ந்து இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.