
ஊரகப் பகுதி பெண்களின் வாழ்வாதாரத்தை உறுதி செய்ய ஆண்டுதோறும் 10,000 பெண்களுக்கு விலையில்லா கறவை மாடுகள் வழங்கப்படும் என்று தமிழக அரசின் நிதிநிலை அறிக்கையில் அறிவிக்கப்பட்டது.
இந்த அறிவிப்பைச் செயல்படுத்தும் வகையில், 2026-27ஆம் நிதியாண்டிற்கு ரூ.57 கோடிக்கான நிர்வாக மற்றும் நிதி ஒப்பளிப்பு செய்து ஆணையிடப்பட்டுள்ளது.
இத்திட்டத்தின் கீழ் பயனாளிக்கு குறைந்தபட்சம் நாள் ஒன்றுக்கு 8 லிட்டர் பால் கறக்கும் திறனுள்ள ஆரோக்கியமான கலப்பின கறவை மாடு வழங்கப்படும்.