
கோவை விலாங்குறிச்சி பகுதியில் குட்கா கடத்திய காரை மடக்க முயன்றபோது, தலைமை காவலர் வேல்முருகன் காரின் மேற்கூரையைப் பிடித்துக்கொண்டு சுமார் 40 கி.மீ. தூரம் பயணித்துள்ளார்.
பின்னர் போலீசாரும் நெடுஞ்சாலை ரோந்து குழுவினரும் இணைந்து காரைத் தடுத்து நிறுத்தியதுடன், ராஜஸ்தானைச் சேர்ந்த 3 பேரைக் கைது செய்து தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருட்களைப் பறிமுதல் செய்தனர்.
இந்தத் துணிச்சலான நடவடிக்கையில் ஈடுபட்ட தலைமை காவலர் வேல்முருகனை நேரில் அழைத்து முதலமைச்சர் விஜய் பாராட்டுத் தெரிவித்துள்ளார்.