
முதல்வர் விஜய் தனது மேசையில் இருப்பதாகக் கூறிய 3 கோப்புகளை ஒரு வாரத்திற்குள் திறக்க வேண்டும் என திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன் சவால் விடுத்துள்ளார்.
தவெக எம்எல்ஏ-க்களுக்கு கார் வழங்குவது குறித்த அறிவிப்பை விமர்சித்த துரைமுருகன், கார் இல்லாதவர்கள் விரல் விட்டு எண்ணக்கூடிய அளவில்தான் உள்ளனர் என்று குறிப்பிட்டார்.
ஓட்டுநருக்கு மாதம் ரூ.25 ஆயிரம் சம்பளம் வழங்குவதாகக் கூறும் முதல்வர், தூய்மைப் பணியாளர்களுக்கும் அதே ஊதியத்தை வழங்க வேண்டும் என்று அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.