
BYD நிறுவனம் தனது Atto 3, Seal, E-MAX 7 மற்றும் Sealion 7 ஆகிய மின்சார வாகனங்களுக்கு பண்டிகைக்கால சிறப்பு சலுகைகளை அறிவித்துள்ளது.
நிதித் திட்டங்களுக்கு ஆண்டுக்கு 7.77% என்ற குறைந்த வட்டி விகிதத்தில் கடன் வசதி மற்றும் தகுதியுள்ள மாடல்களுக்கு இரண்டு ஆண்டுகளுக்கு இலவச பராமரிப்பு வழங்கப்படுகிறது.
வாடிக்கையாளர்களுக்கு 2,00,000 கிலோமீட்டர் வரையிலான நீட்டிக்கப்பட்ட உத்தரவாதம் மற்றும் தேர்ந்தெடுக்கப்பட்ட மாடல்களுக்கு இலவச சார்ஜிங் கூப்பன்கள் உள்ளிட்ட சலுகைகள் வழங்கப்படுகின்றன.