
சட்டமன்றத்தில் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் முன் தயாரிப்பின்றி பொறுப்பற்ற முறையில் பேசுவது தலைமைக்கு அழகல்ல என முதல்வர் விஜய் பதிலுரையில் விமர்சித்துள்ளார்.
எட்டு கோடி மக்களின் நலன்களைத் தீர்மானிக்கும் இடத்தில் பொறுமையாகக் கேட்டு பதில் அளிப்பதே உண்மையான தலைமைப் பண்பு என அவர் வலியுறுத்தினார்.
அமைச்சர்கள் கூட்டுப் பொறுப்பை உணர்ந்து பதில் அளிப்பது ஆட்சியின் இயல்பான நடைமுறை என்றும், எதிர்க்கட்சிகள் இதை வசதியாக மறந்துவிடுவதாகவும் அவர் குற்றம் சாட்டினார்.