/polimer-news/media/media_files/2026/11/01/13-2026-11-01-17-13-13.jpg)
நவம்பர் 3-ஆம் தேதி நடைபெறவுள்ள அமெரிக்க இடைக்காலத் தேர்தலுக்கு 5 கோடியே 5 லட்சம் வாக்காளர்கள் முன்கூட்டியே தங்களது வாக்குகளைப் பதிவு செய்துள்ளனர்.
அமெரிக்க நாடாளுமன்ற பிரதிநிதிகள் சபையில் 435 இடங்களுக்கும், செனட் சபையில் 35 இடங்களுக்கும் புதன்கிழமை தேர்தல் நடைபெறுகிறது.
டிரம்ப்பின் குடியரசுக் கட்சிக்கும் ஜனநாயகக் கட்சிக்கும் இடையே கடும் போட்டி நிலவுவதால் தலைவர்கள் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ளனர்.